திருவள்ளுர் - ஏ.டி.எம் கொள்ளை முயற்சி

Home

shadow


பொன்னேரியில் ஆக்ஸிஸ் வங்கியின் .டி.எம். கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதால், கொள்ளை முயற்சியா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான .டி.எம். மையம் உள்ளது. இந்த .டி.எம் மையத்தின் கண்ணாடிகள் உடைந்து கிடப்பதை பார்த்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளை முயற்சிக்காக கண்ணாடி உடைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .டி.எம் மையத்தில் காவலர் இல்லாததால், .டி.எம். மையத்தின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் அருகில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கிக்கு சொந்தமான .டி.எம். மையத்தில் பணம் வராததால், வாடிக்கையாளர் ஒருவர் கண்ணாடியை உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :