தி.மு.கவில் இணைந்தார் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன்.

Home

shadow

அ.ம.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தார் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன்.

மக்களவைத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்த அமமுகவினர் இனியும் அமமுகவில் ஏன் இருக்க வேண்டும்  என்று ஒவ்வொருவராக கட்சி தாவ தொடங்கினர். அவர்களில் பாப்புலர் முத்தையாஇன்பத் தமிழன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் தாய் கழகமான அதிமுகவில் இணைந்தனர். மேலும் தினகரனுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

திமுகதான் தமிழகத்தின் எதிர்காலம் என்று ஞானசேகரன் கூறினார். மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :