தூத்துக்குடி - தவபூஜை விழா

Home

shadow


சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தரின் மஹா தவபூஜை விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று அருளாசி பெற்றனர்.

தூத்துக்குடி அருகே ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள சித்தர் பீடத்தில் மஹா பிரத்தியங்காராதேவி-மஹா காலபைரவர், லெட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர். இங்கு சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தரின் 48 மணிநேரம் மற்றும் 24 மணி நேர தவபூஜைகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சீனிவாச சித்தரின் 27-ஆவது ஆண்டு மஹா தவபூஜை விழா ஸ்ரீசித்தர் பீடத்தில் இரண்டு நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் மஹா தவபூஜை தொடங்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகளுடன் 24 மணி நேர தவபூஜை புறப்பாடு நடைபெற்றது. செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் ஆன்மிக இசையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் 24 மணி நேர தவபூஜையை முடித்த பின்னர் பால், மஞ்சள், இளநீர், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகத்திற்கு பின்பு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தவபூஜையை சிறப்பாக முடித்து வந்த சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தரிடம் பக்தர்கள் அருளாசி பெற்றனர்.

இது தொடர்பான செய்திகள் :