தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி - புயலாக மாற வாய்ப்பு

Home

shadow

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஃபானி புயலாக மாறும் எனவும், வரூம் 30-ஆம்  தேதி தமிழக கடற்கரையோர பகுதிகளில் இந்த புயல் கரையைக் கடக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் எனவும், பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான செய்திகள் :