தேசிய அளவில் நீர் பற்றாக்குறை - தமிழகம் முதலிடம்

Home

shadow

                 தேசிய அளவில் நீர் பற்றாக்குறை - தமிழகம் முதலிடம்

                 தேசிய அளவில் நீர் பற்றாக்குறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள 4 ஆயிரத்து 378 நகரங்களில் நீர் பற்றாக்குறை உள்ளதாக நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும், ஜல்சக்தி அமைச்சகமும் பட்டியில் வெளியிட்டுள்ளன. இந்த பட்டியலில், முதலிடத்தில் அதிக நீர் பற்றாக்குறை உள்ள நகரங்களின் எண்ணிக்கையுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான், மூன்றாவது இடத்தில் உத்திரபிரதேசம் உள்ளது.

நீர் பற்றாக்குறையை போக்குவதற்கு, மழை நீரை சேமிக்கும் வசதியுள்ள கட்டிடங்களுக்கு அனுமதி அளித்தல், நீரை சுத்திகரித்தல், நீர் நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :