தேனி - கும்பக்கரை, குளிக்கத்தடை

Home

shadow


வெள்ளப் பெருக்கு காரணமாக தேனி, கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :