தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Home

shadow

                தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக இந்த முறை அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள் என்றும், வரும் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் எனவும், தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் அதிக பேருந்துகள் இயக்கப்பட்டன என்றும் தேர்தல் விதி அமலில் உள்ளதால் சூறைக்காற்று, மழை பாதிப்புக்கான இழப்பீடு பற்றி ஆய்வு செய்து பின் முடிவெடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :