தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்

Home

shadow


     அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க, வரும் 27-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு 7 தேசிய கட்சிகளுக்கும், 51 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விளம்பரங்கள், நடத்தை விதிமீறல்கள், பிரச்சாரங்களின் போது அவதூறு பேசுவதை தடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.  மின்னணு வாக்குப்பதிவு முறைக்குத் தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், பொதுத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவுத்தொகையை அதிகரிப்பது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் வகையிலான இயந்திரங்களைப் பயன்படுத்துவது, குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :