நடிகர்கள் படம் வெளியாகும்போது மரங்களை நட வேண்டும் - நடிகர் விவேக் வேண்டுகோள்

Home

shadow

              சென்னையை  அடுத்த அம்பத்தூர் நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 1 லட்சம் மர கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.    இதில் நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  அம்பத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரம் நடும் விழாவினையும் தொடங்கி வைத்தார்.  அதனை தொடர்ந்து அம்பத்தூர் தாமரை குளத்தில் மரங்களை நட்டு  ஜே.சி.பி இயந்திரம் மூலம்  குளத்தை தூர்வாரினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,  தங்களது விருப்பப்பட்ட நடிகர்கள் திரைப்படம் வெளிவரும்போது ரசிகர்கள்  கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது போன்று  நடிகர்கள் படம் வெளியாகும்போது மரங்களையும்  நட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பான செய்திகள் :