நடுத்தர மக்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரி தள்ளுபடி - அருண் ஜேட்லி

Home

shadow

            நடுத்தர மக்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரி தள்ளுபடியை மத்திய அரசு அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.


இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை என்றும் மறைமுக வரிகள், ஜி.எஸ்.டி. என்ற பெயரில் இணைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், ஜி.எஸ்.டி வரி குறைப்பால் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களின் விலை குறைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், வருமான வரி செலுத்துவதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுதோறும் சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், இதன்மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 97 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்த வரியையும் உயர்த்தாமல், ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரி தள்ளுபடியை மத்திய அரசு அளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :