நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை

Home

shadow

 

      போடியில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஜீவன் திரையரங்கம் லைனில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் வைக்கபட்டுள்ளது. இன்று அதிகாலை போடி காவல் நிலைய காவலர் பிச்சைமணி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உடைக்கபட்டிருப்ப்பதை கண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரனை மேற்கொண்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு கைரேகைகள் சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :