நவம்பர் 01- தமிழ்நாடு தினம்

Home

shadow

நவம்பர் 01- தமிழ்நாடு தினம் 

இனி ஆண்டுதோறும் நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 

இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் பேசினார். அப்போது அவர், 'ஆண்டுதோறும் இனி நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்' என்று தெரிவித்தார். 

1956களில் தியாகி சங்கரலிங்கனார் தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும் என்றும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் 75 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்விட்டார். 

சங்கரலிங்கனாரின் மறைவு தமிழக அரசியலை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட காங்கிரஸ் அரசுக்கு அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் அரசு  அதற்கு சம்மதிக்கவில்லை. பின்பு, 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, ‘ 1968-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ' மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழக அரசு' என்று மாற்றி வரலாறு படைத்தது.

இதன் அடிப்படையில் நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்' என்று முதல்வர் தெரிவித்தார்

மேலும் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற கர்நாடகம், கேரளம் மொழி வழி மாநிலங்கள், நவம்பர் ஒன்றாம் தேதியை மாநில நாளாக கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான செய்திகள் :