நாகர்கோவில் மலையில் வெடி வைத்து கற்கள் எடுக்கப்படுவதால் விடுகளில் விரிசல்

Home

shadow


        நாகர்கோவில் அருகே மலையில்  வெடி வைத்து  கற்கள் எடுக்கப்படுவதால், விரிசல் ஏற்பட்டுள்ள 2 ஆயிரம் வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாகர்கோவில் அருகே தோட்டியோடு என்ற இடத்தில் 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், முறையான அனுமதி பெறாமல் பல கல்குவாரிகளும், கிரசர் பொடி தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. மலைகள் உடைக்கப்பட்டு கற்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பாறையை குடைந்து கிரசர் பொடிகளும் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் மலைகளை வெடிவைத்து  உடைக்கும் போது, அருகிலுள்ள பரசேரி, இட மருவத்தூர், கொன்னக்குழி விளை, கரிஞ்ஞான் கோடு ஆகிய கிராமங்களில் வீடுகளில் அதிர்வுகள் ஏற்பட்டு விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. சுமார் 2 ஆயிரம் விடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளதால் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வள அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குவாரி உரிமையாளர்கள் அதிகளவு வெடிபொருட்களை வெடித்து இரவு பகல் பாராமல் வெடித்து பாறையை தகர்ப்பதாகவும், அனுமதி பெறாமல் இயங்கும் கிரசர் பொடி தொழிற்சாலைகளில் இரவு பகல் பாராமல் லாரிகளில் பொடிகளை ஏற்றிச் செல்வதாலும், சிறுபிள்ளைகள் முதல் முதியோர்கள் வரை பல நோய்களுக்கு ஆளாக நேரிடும் அவலநிலை உள்ளதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :