நாட்டில் தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15-வது இடம்

Home

shadow

 

நாட்டில் தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தை பிடித்துள்ளது.

எளிதில் தொழில் தொடங்க எதுவாக உள்ள மாநிலங்களின் தரவரிசை பட்டியலை, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம், வெளியிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான தொழில் போட்டியை அதிகரிக்கவும், முதலீடுகளை கவரும் விதமாகவும் இந்த பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 98 புள்ளி நான்கு இரண்டு சதவீத மதிப்பெண்களுடன் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து 98 புள்ளி மூன்று மூன்று சதவீத மதிப்பெண்களுடன் தெலுங்கானா மாநிலம் 2-வது இடத்தையும், 98 புள்ளி பூஜ்யம் ஏழு சதவீத மதிப்பெண்களுடன் ஹரியாணா மாநிலம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் 90 புள்ளி ஆறு எட்டு சதவீத மதிப்பெண்களுடன் தமிழகம் 15வது இடத்தை பிடித்துள்ளது. 2016-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 18-வது இடத்தை பிடித்திருந்த தமிழ்நாடு தற்போது 3 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளது.

 

இது தொடர்பான செய்திகள் :