நான்காம் நாளான இன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புருஷா மிருக வாகனத்தில் கபாலீஸ்வரர் அம்பாளுடன் பக்தர்களுக்கு காட்சி

Home

shadow

                             மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா நான்காம் நாளான இன்று புருஷா மிருக வாகனத்தில் கபாலீஸ்வரர் அம்பாளுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழா  தொடர்ந்து நான்கு நாட்களாக வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கபாலீஸ்வரர் அம்பாளுடன் புருஷா மிருக வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அவருடன் புலி வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகனும், சிங்க வாகனத்தில் அம்பாளும் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக உற்சவர் மற்றும் அம்பாளுக்கு தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றனஇதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்

இது தொடர்பான செய்திகள் :