நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த இந்த மாதம் 31-ம் தேதி வரை அவகாசம்

Home

shadow

  

       கஜா புயல் பாதித்த நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த இந்த மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கஜா புயலில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்றவும், அதற்கான இயந்திரங்கள் வாங்கவும் .7 கோடியே 60 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கஜா புயல் பாதித்த  நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை  மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :