நீலகிரி மாவட்டத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய்.30 கோடி ஒதுக்கீடு

Home

shadow

              கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு மாநில பேரிடர் நிவாரண  நிதியில் இருந்து ரூபாய்.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி மாவட்டத்தில்  மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் சேதம் அடைந்த 1,ஆயிரத்து 225 குடிசைகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து நூறு மற்றும் முழுமையாக சேதம் அடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் தொகையை உடனடியாக நிவாரணம் வழங்கவும், முழுமையாக சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  சேதம் அடைந்த சாலைகள், மின் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளை உடனடியாக மறுசீரமைக்க  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சேதம் அடைந்த தோட்டக்கலை பயிர்களுக்கு வேளாண் பெருமக்களுக்கு இடுபொருள்  மானியம் வழங்க உரிய முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்துக்கு உடனடி நிவாரணத்துக்காக ரூ.30 கோடியை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும்  என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :