நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் பெய்த கனமழையால் உதகை- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் கண்ணைக் கவரும் வகையில், புதிதாக 10க்கும் மேற்பட்ட நீர் வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன.
இதனால் சாலையின் இருபுறமும்
உள்ள வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளித்தது. மேலும் பச்சை பசேல் என்னும் வனங்களின்
இடையே வெள்ளியை உருக்கி ஊற்றுவதைப் போன்றுள்ள இந்த புதிய நீர் வீழ்ச்சிகள்.