நெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை

Home

shadow

நெல்லைமாவட்டம் நான்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது உறவினரான சுரேஷ் ஆகிய இரண்டு பேரும், நான்குநேரி பேரூந்து நிலையம் அருகில் ஹோட்டல் வைத்து தொழில் செய்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்றிரவு கடைக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் இரண்டுபேரையும் அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த நான்குநேரி காவல்துறையினர்,  படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி ஓம் மீனா பிரகாஷ் மற்றும் வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் பார்வையிட்டு அருகில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிப் பதிவுகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :