நெல்லை - 144 தடை உத்தரவு

Home

shadow


      நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் தென்காசியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :