பருவ மழை பெய்து வருவதால் முலாம்பழம் அதிக விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி

Home

shadow

 

     ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, முலாம்பழம் அதிக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மஞ்சினி, சாத்தப்பாடி, மல்லியகரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நவீன சாகுபடி முறையில் விளை நிலங்களில் நிலப்போர்வை அமைத்து முலாம்பழம் பயிர் சாகுபடி செய்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம், 5 ஆயிரம் விதைகள் வரை நடவு செய்வது வழக்கம். தற்போது பருவ மழை பெய்து வருவதால் முலாம்பழம் அதிக விளைச்சல் கண்டு, ஏக்கர் ஒன்றுக்கு 10 டன் வரை மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த செலவில் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய பணப்பயிராக விளங்குவதோடு, அனைத்து விவசாயிகளும் நிலப்போர்வை அமைத்து சாகுபடி செய்தால் நல்ல லாபம் பெறலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :