பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர் போராட்டம்

Home

shadow

                          பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும், பட்டாசுகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர் போராட்டம் நடைபெற உள்ளது.


பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், வேதியியல் பொருள்கள் விற்பனையாளர்கள், லாரி செட் உரிமையாளர்கள் உள்ளிட்டோரை கொண்டு பட்டாசுத் தொழில்- பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்புக் குழு எனும் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்., கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வேலை இழந்துள்ள பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவராணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்த குழு சார்பில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பட்டாசு தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் சிவகாசி - திருத்தங்கல் சாலையில் குறுக்குப்பாதை பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள மைதானத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர் போராட்டம் நடைபெறும் என பட்டாசுத் தொழில்- பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்புக் குழுவினர்  தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :