பிரதமரின் பேச்சை நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது வருத்தம் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

Home

shadow

சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கிரண்பேடி, மொழிதான் நம்மை இணைப்பதாக தெரிவித்தார். உலகத்தோடு இணைய ஆங்கிலம் தேவை என்றும், இந்தியாவை புரிந்துகொள்ளவும், வடமாநில மக்களை தொடர்பு கொள்ள இந்தி அவசியம் என்றார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதமரின் மன்-கி-பாத் உரை, நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். ஆனால் இசைக்கு மொழிகள் இல்லை என்றும் இசை அனைவரின் இதயங்களை இணைப்பதாக கூறினார். அப்போது கிரண்பேடி சிறுவயதில் தான் பாடிய பாடல்களை பாடி நினைவு கூர்ந்தார்.

இது தொடர்பான செய்திகள் :