பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Home

shadow

 

        நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையத்தை மூடக் கூடாது என்று மத்திய அரசை முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 1957-ம் ஆண்டு உதகையில் தொடங்கப்பட்ட மத்திய உருளை ஆய்வு மையம், கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். இந்த மையத்தை மூடினால், தென் மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தென் மாநில விவசாயிகள் பஞ்சாபில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகு என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். வட மாநில ஆய்வு மையம் உருவாக்கும் ரகங்கள் இங்கு பயன் தராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உதகை,கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையத்தை மூடக்கூடாது என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, அந்த ஆய்வு மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :