பிளஸ் 2 தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத் துறை

Home

shadow

பிளஸ் 2 தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ஆம் தேதி வெளியானது.  இதில் 91 புள்ளி 3 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள், தங்களுக்கு மதிப்பெண்கள் குறைந்து விட்டதாகக் கருதினால் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், மறுகூட்டல் செய்யவும் வழிகாட்டுதலை, அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். அதன்படி விடைத்தாள் நகல் பெற  ஒவ்வொரு பாடத்துக்கும் கட்டணமாக 275 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் மறுகூட்டல் செய்ய விரும்புவோர், உயிரியல் பாடத்துக்கு மட்டும் 305 ரூபாயும் மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் புதன்கிழமை வரை மூன்று நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான செய்திகள் :