பிளஸ்1 ,பிளஸ்2 மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன்கம்ப்யூட்டர் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ்

Home

shadow

மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், வாரத்திற்கு ஒரு முறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசாணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாவட்ட தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் - விற்பனையாளர்கள் சார்பில் 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த புத்தக திருவிழாவை பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், புத்தக வாசிப்பு என்பது ஒருவனை கல்வியில் சிறந்தவனாகவும், ஒழுக்கமுள்ளவனாகவும் மாற்றுவதாகவும், வாரத்திற்கு ஒரு முறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்யூட்டர் வசதி செய்து தரப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :