புகையான் நோய் தாக்குதலால் 300 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் பாதிப்பு

Home

shadow

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள மறையூர், கோவங்குடி போன்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழை வெள்ளத்தால் மயிலாடுதுறையில் அதிக அளவில் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நிவாரணம் இதுவரை வழங்கப்படாத நிலையில், தற்போது மயிலாடுதுறையில் புகையான் நோயால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் மேலும் கவலை அடைந்துள்ளனர். தற்போது வரை 300 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் புகையான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பயிர்களின் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே நோய் தாக்குதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :