புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் வைத்திலிங்கம் திடீர் ராஜினாமா: மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்

Home

shadow

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் தனது பதவியை நேற்றிரவு திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

புதுவை காமராஜர் நகர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட வைத்திலிங்கம், 2016 முதல் சட்டப்பேரவைத் தலைவராக இருந்து வந்தார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் புதுவை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்படுவார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியில் இன்று வெளியிடப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் தனது பதவியை நேற்றிரவு திடீரென ராஜினாமா செய்துள்ளார். புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவர் சிவக்கொழுந்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை வியாழக்கிழமை இரவு அவர் அளித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் மக்களவை தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்திகள் :