புதுச்சேரி - முதலமைச்சர் நாராயணசாமி

Home

shadow

                                                                      

புதுச்சேரி மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை, மாநில முதலமைச்சர்  நாராயணசாமி சட்டபேரவை வளாகத்தில் இன்று வெளியிட்டார். இதில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் நடைபெற்றன. 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சார்ந்த 15 ஆயிரத்து 75 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை, மாநில முதலமைச்சர்  நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று வெளியிட்டார். இதில் 13 ஆயிரத்து 163 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்மாணவர்கள் 5 ஆயிரத்து 842 பேரும், மாணவிகள் 7 ஆயிரத்து 321 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறினார். மேலும், இந்த ஆண்டில்  87 புள்ளி மூன்று இரண்டு விழுக்காடு தேர்ச்சி அடைந்துள்ளனர் எனவும், இது கடந்த ஆண்டை விட பூஜ்யம் புள்ளி ஆறு நான்கு விழுக்காடு அதிகம் என்றும் முதலமைச்சர்  நாராயணசாமி தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :