புலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி

Home

shadow


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள சிற்றோடைகள் மற்றும் நீரோடைகள் தண்ணீர் இன்றி வறண்டுகாணப்படுகின்றன. 

இதன் காரணமாக வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி ஆழியார், சேத்துமடை உள்ளிட்ட வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வரத் தொடங்கியுள்ளன.  இதனைத் தடுக்கும் பொருட்டு, வனப் பகுதியில் ஆங்காங்கே குட்டைகள், தண்ணீர் தொட்டிகள் அமைத்து நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

நீர் நிரப்பப்பட்ட குட்டைகளைத் தொடர்ந்து கண்காணிக்க குழு அமைத்துள்ளதாகவும், வனப்பகுதியை விட்டு விலங்குகள் வெளியில் வருவதைத் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இது தொடர்பான செய்திகள் :