பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

Home

shadow

 

         திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் மீது தனியார் பள்ளி வேன் மோதி விபத்துக்குள்ளானதில், பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

திருச்சி துவாக்குடி மலை பகுதியில் உள்ள வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் நந்தகுமாரும், தாங்கள் பயிலும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லியோனார்டு பள்ளி வேன் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல திருச்சி சமயபுரம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தபோது எதிரே வந்த அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவர் நவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு மாணவர் நந்தகுமார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த சமயபுரம் காவல்துறையினர், உடலை கைப்பற்றி ஆய்வுக்குகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு் அனுப்பி வைத்தனர். இதையத்து, வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :