போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு 204 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இன்றைக்குள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Home

shadow

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை நிறுத்தக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்ப மறுப்பவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து மாயாண்டி சேர்வை என்ற போக்குவரத்து ஓய்வூதியதாரர் தங்களது பிரச்சனை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுஇந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவைத் தொகையான 379 கோடியில், இரண்டாவது தவணையாக 204 கோடியை இன்றைக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக அரசாணை பிறப்பித்து தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் 3வது தவணை தொகையை வழங்குவது தொடர்பாக ஜனவரி 3ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இது தொடர்பான செய்திகள் :