போத்தனூரில் குப்பை கிடங்கில் கடந்த இரண்டு நாட்களாக பற்றி எரியும் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது

Home

shadow

போத்தனூரில் குப்பை கிடங்கில் கடந்த இரண்டு நாட்களாக  பற்றி எரியும் தீயால் அப்பகுதி முழுவதும்  புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.

 கோவை  மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் குப்பைகிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் கடும் வெப்பத்தின் காரணமாக தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது. இந்த  தீ விபத்தை  நேரில் பார்வையிட்ட கோவை மாவட்ட ஆட்சியர்,  தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருவதாகவும்   150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைகிடங்கில் வெயிலின் தாக்கத்தால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மாநகராட்சி நிர்வாகமும் தீ அணைப்பு துறையினரும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :