மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிப்பட்டியல் வெளியீடு

Home

shadow

                     மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிப்பட்டியல்  இன்று வெளியிடப்பட்டுள்ளது

 

மக்களை தேர்தல்  வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இதனை தொடர்ந்து ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து வருகின்றன. எற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தவிர அனைத்து கட்சிகளும் தங்கள் தொகுதிப்பட்டியலை வெளியிட்டுவிட்டன. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக  வேட்பாளர்களின் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ், விருதுநகர் தொகுதியில்  அழகர்சாமி  வடசென்னை தொகுதியில்  அழகாபுரம் மோகன் மற்றும் திருச்சி தொகுதியில் இளங்கோவன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :