மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுக – தமிழக எம்.பி.க்களுக்கு பொன்.ராதா வேண்டுகோள்

Home

shadow

               மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுக – தமிழக எம்.பி.க்களுக்கு பொன்.ராதா வேண்டுகோள்

              தமிழக எம்.பிக்கள் தங்கள் சொத்துகளை விற்றாவது விவசாயக் கடன், கல்விக் கடன்களை அடைக்க முன்வர வேண்டுமென பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

             திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

             தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை,  ஒரு கட்சியின் பிரச்சனை அல்ல. அது நாட்டின் பிரச்சனை என தெரிவித்தார்.

           தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 மக்களவை உறுப்பினர்களும், தங்களது சொத்துகளை விற்றாவது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின் படி விவசாய கடன் மற்றும் கல்விக் கடன்களை அடைக்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

             மேலும், அஇஅதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான். அது அமித்ஷா தான் என கொங்குநாடு ஈஸ்வரன் சொன்ன கருத்தை திரும்ப பெறவேண்டுமென  பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான செய்திகள் :