மக்களின் 20 ஆண்டு கோரிக்கை - நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதை ரயில் சேவை நேற்று தொடக்கம்

Home

shadow

சென்னை புறநகர் மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையான சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் பாதையில் எதிரெதிர் திசைகளில் இரு சர்க்குலர் ரயில் சேவைகள்  நேற்று தொடங்கப்பட்டது .

சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்த்தை தொடர்ந்து  காலை 9.50 மணி அளவில் நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் தனது முதல் பயணத்தை சர்க்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் பாதையில் தொடங்கியது. இதனையடுத்து எதிர்திசையில் இரண்டாம் சர்க்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு அரக்கோணம் வழியே தொடங்கியது . சுற்றுவட்டப் பாதையில் ரயில் சேவை தொடங்கிய நிலையில், கடற்கரை-திருமால்பூர்-சென்னை கடற்கரை சென்று வரும் ரயில் சேவையும், கடற்கரை-அரக்கோணம்-திருவள்ளூர்-சென்னை கடற்கரை ரயில் சேவையும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மேலும் 6 சேவைகள் தொடங்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இதனிடையே இந்த ரயில் சேவைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பி கிடைத்துள்ளது. பஸ் பயணத்தில் கட்டணம் மிக உயர்வு என்பது மட்டுமல்லாமல் பயண நேரமும் மிகவும் அதிகமாகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தைத்தான் விரும்புகின்றனர். தற்போது, தொடங்கப்பட்டுள்ள இச்சேவையில் கடற்கரையிலிருந்து மீண்டும் கடற்கரைக்குச் செல்ல சுமார் 6 மணி நேரம் ஆகிறது. எனவே, பயணிகள் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என்பதால், அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரைக்கும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்குமான இச்சேவையை விரைவு ரயில்சேவையாக மாற்றவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பான செய்திகள் :