மதுரை விவகாரம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விசாரணை - சத்யபிரத சாகு

Home

shadow

மதுரை ஆவண ஆறையில் நுழைந்த சம்பவம் குறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு , வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் எனவும் மதுரை ஆவண ஆறையில் நுழைந்த சம்பவம் குறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மதுரை சம்பவம் குறித்து கூடுதல் தேர்தல் அதிகாரி நாளை அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்த அவர் இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும் பறக்கும் படை கண்காணிப்பு இருக்கும் என தெரிவித்தார். தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள்  தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்குப் பின்னரே வெளியிடப்படும் என தெரிவித்தார்.


இது தொடர்பான செய்திகள் :