மதுரை - இந்துசமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் கண்டனம்

Home

shadow


      ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

 

கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான வழக்கு தொடர்பாகநீதிபதிகள் கூறுகையில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை எனவும், கோவில்களுக்கு இடங்களை தானமாக வழங்கியோர் பட்டியல் மற்றும் சொத்து விவரங்கள் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக உள்ளதா என அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். இது குறித்து வருவாய்த்துறை செயலர், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :