மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொய்யான தகவலை தெரிவிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Home

shadow

தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் கைவிடப்பட்டதாக எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொய்யான தகவலை தெரிவிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், தமிழ்நாட்டில் எந்தவொரு மீத்தேன் எரிவாயுத் திட்டமோ, பாறை எரிவாயுத் திட்டமோ செயல்படுத்தப்படவில்லை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பெய்யான தகவலை தெரிவித்துள்ளதாக கூறினார். மத்திய பெட்ரோலியத் துறை மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பொய்யான தகவல்களை தெரிவிப்பதை நிறுத்தி விட்டு, மீத்தேன்-ஷேல் எரிவாயுத் திட்டத்தை கைவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான செய்திகள் :