மன்னார்குடி காவல்துறை - இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து செல்வதன் அவசியம்குறித்து விழிப்புணர்வு

Home

shadow

          மன்னார்குடியில் தலைக்கவசம் அணிந்து செல்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.                                                  

.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து செல்வதன் அவசியம்குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மன்னார்குடி தேரடியில் தொடங்கிய இருசக்கர வாகனப் பேரணியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பாதுகாப்பான பயணம், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும்வழங்கப்பட்டன. இந்த பேரணியில் காவல்துறையினர்பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர்  தலைக்கவசம் அணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

இது தொடர்பான செய்திகள் :