மழை நீரை அனைவரும் சேமிக்க வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Home

shadow

             மழை நீரை அனைவரும் சேமிக்க வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக மக்கள் அனைவரும் வடகிழக்கு பருவமழைக்கு முன் மழை நீரை சேமிக்கும், பணியில் ஈடுபட வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மழை நீர் சேமிப்பை ஒரு குழுவோ, அமைப்போ அல்லது ஒரு அரசோ செய்து முடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மழை நீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இதை கருத்தில் கொண்டு தமிழக மக்கள் அனைவரும் வடகிழக்கு பருவமழைக்கு முன் மழை நீரை சேமிக்கும், பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :