மீன்பிடி படகு மற்றும் வலைக்கு தீ வைத்த மர்ம கும்பல்

Home

shadow

                 கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை அருகே மீன்பிடி படகிற்கு மீனவர்கள் சிலர் தீ வைத்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

கடலில் சுருக்குவலை பயன்படுத்தி மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடை அமலில் உள்ள நிலையில், எம்.ஜி.ஆர் திட்டு பகுதியை சேர்ந்த சிலர், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் அருகே சுருக்கு வலை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 

அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று படகுக்கு தீ வைத்தது மட்டுமல்லாமல், மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்கு வலைகளையும் சேதப்படுத்தினர். இதனால், பரங்கிப்பேட்டை நோவா துறைமுகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :