மேகதாது அணை விவகாரம் – முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Home

shadow

                  மேகதாது அணை விவகாரம்  – முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

                 மேகதாது அணை தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

                 கர்நாடக மாநிலம் மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், மேகதாது அணைக்கு அனுமதி வழங்கிட கோரி கர்நாடக அரசு அளித்த மனுவை, மத்திய அரசு பரிசீலனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, மத்திய சூற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஆகியோருக்கு முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், கர்நாடகாவிற்கு மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது எனவும் மேலும், ஜூலை 19ஆம் தேதி நடைபெறவுள்ள சூற்றுச் சூழல் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்கூடாது எனவும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :