மேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு

Home

shadow

                கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 30  ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளது.


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக  கர்நாடக அணைக்களில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. இதனால் 50 அடி மட்டுமே நீர் இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 10 நாட்களிலேயே 100 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.  இதனிடையே காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து மேட்டூர் அணைக்கு வரும்  நீரில் அளவு படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் நேற்று நிலவரப்படி 24 ஆயிரம் கன அடியாக குறைந்து காணப்பட்ட நீர் வரத்து  இன்று மீண்டும் 29 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர்  அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும்  நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியாக உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :