மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா ராஜினாமா

Home

shadow

 

               தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா ராஜினாமா செய்துள்ளார்.

தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா, அப்போதே பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஆனால், சக நிர்வாகிகள் அதற்கு உடன்படவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருப்பதால், சோமன் மித்ராவும் தனது ராஜினாமா கடிதத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரை மேற்கு வங்காள காங்கிரஸ் விவகாரத்தை கவனிக்கும் மேலிட பொறுப்பாளர் கவுரவ் கோகாய் நேரில் சந்தித்தார். மித்ராவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை என்றும், தொடர்ந்து பணியாற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த கோகாய், புதிய தேசிய தலைவர், மாநில கமிட்டிகளை மாற்றி அமைக்கும்போது, மாநில தலைவர்களை மாற்றுவது பற்றியும் முடிவு எடுக்கப்படும் என்று  தெரிவித்தார்…

இது தொடர்பான செய்திகள் :