மேல் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

Home

shadow

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகத்தின் கீழ், இனாம்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு ஈச்சம்பட்டி கிராமத்தில் 15 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பிலான பெரிய ஏரி அமைந்துள்ளது. கடந்த 1995 ம் ஆண்டு ரயில்வே பாதை அமைக்கும் பணிக்கு இந்த பெரிய ஏரியிலிருந்து தான் அதிகளவில் மண் எடுக்கப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை பெரியஏரி குண்டும் குழியுமான நிலையில், மண் இல்லாமல் பாறைகளாகத் தான் உள்ளது. மண் இன்றி வெறும் பாறைகளாக மட்டுமே உள்ள பெரிய ஏரியில், 2017-18ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி பணிகள் தொடங்கி நவம்பர் ஒன்றாம் தேதி வரை தூர்வாரும் பணியினை மேற்கொண்டதாக, ஏரியின் நுழைவு வாயிலிலேயே ஊராட்சி நிர்வாகம் திடீரென அறிவி்ப்புப் பலகை ஒன்றை வைத்துள்ளது.

      இந்த அறிவிப்பு பலகையினை பார்த்த அப்பகுதி மக்கள், ஊராட்சி நிர்வாகம் வேலை செய்தாக தெரிவித்துள்ள செப்டம்பர் மாதம் முதல் இப்பகுதியில் தொடர் கனமழை பெய்துள்ளது. அந்த நாட்களில் யாருமே எவ்வித வேலையையும் இங்கு மேற்கொள்ளவில்லை என்று இப்பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ஏரியினை தூர்வாரமலே திட்டச்செலவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த 8 லட்சத்து 48 ஆயிரத்து 585 ரூபாயை அதிகாரிகள் கூட்டு சேர்ந்து மோசடி செய்துள்ளதாகவும் இந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :