வடதமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Home

shadow

               வடதமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அதேபோல் சென்னையிலும் சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :