வரி ஏய்ப்பு தீவிர கண்காணிப்பு

Home

shadow


          வரி ஏய்ப்பை தடுப்பதற்காக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற தகுதியுடையவர்கள் மீதான கண்காணிப்பை வருமான வரித்துறை  தீவிரப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் 182 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் மட்டுமே ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்ற தகுதியை பெற முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஈட்டும் வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதால், அந்த தகுதியை யாரும் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பத்தில் வருமான வரித்துறை உறுதியாக உள்ளது. இந்தியாவில் இருந்து கொண்டு வெளிநாடு வாழ் இந்தியர் என்று கூறி, வரி ஏய்ப்பில் ஈடுபடுவதை தடுக்க, வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட வரியை மீண்டும் மதிப்பீடு செய்வது தொடர்பாக ஏராளமான என்ஆர்ஐகளுக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.  

இது தொடர்பான செய்திகள் :