வருமானவரி சோதனை

Home

shadow

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜாய் ஆலுகாஸ் நகைக்கடையில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் கேரளா உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

            மத்திய அரசின், பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின்னர், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், தொடர்ந்து, வருமானவரி புலனாய்வுத்துறை சோதனைகள் வேகப்படுத்தப்பட்டு  வருகின்றன. அண்மையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்று முடிந்தன.

            இந்த நிலையில், சென்னை, கேரளா உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள  ஜாய்ஆலுகாஸ் நகைக்கடைகளில் இன்று காலை முதல் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஜாய் ஆலுக்காசுக்கு சொந்தமான பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :