வரும் பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Home

shadow

வரும் பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், வரும்  கல்வி ஆண்டில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அடுத்த கல்வி ஆண்டில் 10 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 73 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி மையங்களில் சேர்ந்துள்ளதாகவும் தமிழக அரசு கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். வரும் பிப்ரவரி மாதத்தில் புதிய பாடத்திட்டங்கள் வெளியிடப்படும் என்றும்  3 ஆண்டுகளுக்குப் பதிலாக  2 ஆண்டுகளிலேயே பாடத்திட்டங்களை மாற்றுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :